முடிவற்ற ரோட்டில் ஒரு வழி பயணம்
முடிவற்ற ரோட்டில் ஒரு வழி பயணம்
ரோடுகள் புதிரையே தந்து கொண்டு இருக்கின்றன
பலமுறை சென்று வந்தாலும் புதியதாகவே தோன்றுகின்றன
காலத்தை உண்டு ஜீரணித்து
என்னோடு பயணித்துக் கொண்டே இருக்கின்றன
சில நேரங்களில்
என்னைப் பார்த்துச் சிரிப்பதாகத் தோன்றும் உன்னைவிட வாழ்நாள் அதிகம் என்று
வரைபடத்தின் கோடுகளில்
காணாமல் போன தருணங்கள் அனேகம்
முகமறியா மனிதர்களோடும் சிறுதெய்வங்களோடும் ஓடிக்கொண்டிருக்கிறேன்
ரோடுகளின் வழியாக
ஏரிக்கரைகளும் தோட்டத்து வீடுகளும் ததும்பி வழியும் நீர்நிலைகளும் கதைகளின் ஊற்று மூலங்கள்
ரோடுகள் பார்த்துப் பழகிவிட்டன
இருப்பதையும் இல்லாமல் போனதையும் கண்டு
அடிக்கடி தோன்றுவதுண்டு ரோடுகளின் வரலாறு சாம்ராஜ்யங்களின் வரலாறு என
ரோடுகளே மனிதனின் வளர்ச்சி
ரோடுகளே மனிதனின் அடையாளம்
ரோடுகளே மனிதனின் வன்மம்
ரோடுகளே மனிதன்.
கருத்துகள்