ஆத்மாநாம் கவிதை
இசை/ஓசை
வயலினில்
ஒரு நாணாய்
எனைப் போடுங்கள்
அப்பொழுதேனும்
ஒலிக்கின்ற
எனப் பார்ப்போம்
அவ்வளவு துல்லியமாக
அவ்வளவு மெல்லியதாக
அவ்வளவு கூர்மையாக
எல்லா நாண்களுடனும்
ஒன்று சேர்ந்து
ஒலித்தபடி
உள் ஆழத்தில்
ஒலியின்
ஆள் அரவமற்ற
இடத்தில்
மிக மிக மெலிதாய்
ஒரு எதிரொலி கேட்கிறது
கூர்ந்து கேட்டால்
அதே துல்லியம்
அதே மென்மை
அதே கூர்மை
(விருட்சம் கவிதை நிகழ்ச்சியில் வாசித்தது. 7.8.21)
கருத்துகள்